வைகறை
இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் (IDPs) பல இடப்பெயர்வுகளைச் சந்தித்துள்ளனர். பெரும்பாலானவர்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டுள்ளபோதிலும் எஞ்சியிருக்கும் இடம்பெயர்ந்தோர் பிரதானமாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். போரின் நீடித்த தாக்கங்கள் மற்றும் நீண்ட கால இடப்பெயர்வுகள் பல்வேறு உளவளம் தொடர்பான பல பிரச்சினைகளை விளைவித்துள்ளன. இப்பிரச்சினைகள் இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கும் முன்னர் இடம்பெயர்ந்து குடியேற்றப்பட்டவர்களுக்கும் குறிப்பிடத்தக்க சவால்களைத் தொடர்ந்து ஏற்படுத்துகின்றன. மேலும் இந்த மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய உளவளத்துணை ஆதரவுச் சேவைகள் போதாமல்உள்ளமையினால் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. இந்தச் சூழலில்தான் CMRD இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள விளிம்புநிலைக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் பரந்த வைகறை திட்டத்தின் ஒரு பகுதியாக உளவியல் செயலாக்கத் திட்டத்தில் பங்கேற்க FAIRMED உடன் கூட்டு சேர்ந்துள்ளது. STJF மூலம் நிதியளிக்கப்பட்ட இந்தத் திட்டம், இந்த மாவட்டங்களில் இடம்பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய உளவளத்துணைசார் பிரச்சினைகளை ஆராய்வதையும், தற்போதுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களால் வழங்கப்படும் உளவளத்துணை தொடர்பான இடைவெளிகளைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. CMRD திட்டத்தின் ஆராய்ச்சி பங்காளியாக அனுபவ ரீதியான சான்றபதாரங்களுடன் கூடிய சுகாதார தலையீட்டிற்கு பொறுப்பான நிறுவனமாக இருக்கின்றது. நடைமுறைப்படுத்தல் ஆராய்ச்சியில் வழக்கமாக உள்ளதைப் போல, ஆராய்ச்சி கேள்விகளுக்கு தீர்வு காண்பதற்கும், அதன் மூலம், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை மிகச் சிறந்த முறையில் எதிர்கொள்ளும் வகையில், எங்கள் பல்வேறு கட்டங்களில் சிக்கல் அடையாளம் காணுதல், தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு மற்றும் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்துதல் ஆகியவை அடங்கும். மேலும், CMRD, ஆராய்ச்சிப் பங்காளியாக, Fairmed ஆல் மேற்கொள்ளப்படும் உளவளத்துணை தலையீட்டின் வெவ்வேறு கட்டங்களில் செயல்படுத்தும் விளைவுகளை அளவிடும், முக்கிய தகவல் அளிக்கும் நேர்காணல்கள், ஆய்வுகள் மற்றும் குழு கலந்துரையாடல்கள் போன்ற ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்துகிறது.
|