
(ஆவணப் பதிவிறக்கத்திற்கு)

(ஆவணப் பதிவிறக்கத்திற்கு)
இலங்கைக்கும் பிற நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு தொழிலாளர் ஒப்பந்தங்கள்: ஒரு முக்கியமான சட்டப் பகுப்பாய்வு
எழுத்தாளர்கள்: வசந்தா செனவிரத்ன, தர்ஷன சுமனதாச, அகலங்க திலகரத்ன மற்றும் ரனுலி சேனாரத்ன
சமகால உலகில் வேலை தேடி இடம்பெயர்வது ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டது. அதேவேளை பல நாடுகள் குறிப்பாக வளரும் மற்றும் குறைவிருத்தி நாடுகளிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து மலிவான உழைப்பைத் தேடுகின்றன. சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிற தொடர்புடைய ஒப்பந்தங்களைக் கவனத்திற்கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இருதரப்பு தொழிலாளர் ஒப்பந்தங்களின் விதிகளை இவ்வறிக்கை பகுப்பாய்வு செய்கிறது. மேலும் இவ்வறிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிகழ்ச்சி நிரலின் கீழ் தொடர்புடைய நிலையான அபிவிருத்தி குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள் என்பவற்றின் பொருந்தக்கூடிய தன்மையை சுருக்கமாக விவாதிக்கிறது. இவ்வறிக்கையானது முக்கியமாக இரண்டாம் தர தரவுகளை ஒப்பீட்டு எடுத்துக்காட்டுகளுடன் பயன்படுத்தி இருதரப்பு தொழிலாளர் ஒப்பந்தங்களின் உள்ளடக்க பகுப்பாய்வு முறையைப் பின்பற்றும் ஒரு பண்புரீதியான ஆராய்ச்சி ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட இருதரப்பு தொழிலாளர் ஒப்பந்தங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பை வழங்கவில்லை என்பதுடன் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் ஆவணங்களின் கீழ் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுடன் முழுமையாக ஒத்திசைவாகக் காணப்படவில்லை என்பதையும் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
(ஆவணப் பதிவிறக்கத்திற்கு)
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நாட்டுக்குத் திரும்பிய தொழிலாளர்கள் தொடர்பான கருத்தாய்வு: வாழ்க்கை, தொழில் நிலைமைகள் மற்றும் நிறுவன ஆதரவு வழிமுறைகள் பற்றிய பாலின பகுப்பாய்வு
எழுத்தாளர்கள்: அனோஜி ஏகநாயகே, கோபாலபிள்ளை அமிர்தலிங்கம், நிக்கோலா பைபர் மற்றும் சுனேத்ரா பெரேரா
இலங்கையின் மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மே 2022 இல் நடத்தப்பட்ட நாடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய ஆய்வின் ஆரம்ப முடிவுகளை இந்த அறிக்கை முன்வைக்கிறது. இந்த ஆய்வின் பிரதான நோக்கமானது, புலம் பெயர்ந்த நாடுகளில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய நிறுவன ரீதியான ஆதரவு பொறிமுறைகளை பரிசீலிப்பதாகும். குறிப்பாக பாலின வேறுபாடுகளில் கவனம் செலுத்தி இருதரப்பு தொழிலாளர் ஒப்பந்தங்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட வழிகளில் இடம்பெயர்வது புலம்பெயர்ந்தவர்களின் அனுபவங்களை சாதகமாக பாதித்துள்ளதா என்பதைக் கண்டறியும் ஒரு பரந்த ஆய்வின் ஒரு பகுதியாக இக்கருத்தாய்வு உள்ளது. இந்தக் குறிக்கோளைப் பிரதிபலிக்கும் வகையில், ஆண் மற்றும் பெண் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் கிடைக்கக்கூடிய நிறுவன ஆதரவு தொடர்பான அனுபவங்களில் வேறுபாடுகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்கவும் இக் கருத்தாய்வு முயற்சின்றது.
(ஆவணப் பதிவிறக்கத்திற்கு)
இயற்கை பேரழிவுகளுடன் கூடிய திட்டமிடப்பட்ட மீள்குடியமர்த்தல்: இலங்கை தொடர்பானது
எழுத்தாளர்கள்:ரன்மினி விதானகம, அலிகான் மொஹிடீன், தனேஷ் ஜயதிலக மற்றும் ரஜித் லக்ஷ்மன்
அனர்த்தம் காரணமாக ஏற்படுகின்ற இடம்பெயர்வுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இந்நிலையினால் ஈர்க்கப்பட்ட பங்குதாரர்களுக்கும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. குறுகிய கால பாதிப்புகள் அதிக கவனத்தை பெறும் அதேவேளை நீண்ட கால தாக்கங்கள் அவ்வாறான கவனத்தைப் பெறுவதில்லை. மீள்குடியமர்த்தல் திட்டங்களில் பாதுகாப்பு பிரதான நோக்காக காணப்படும் அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள பல்வகை தேவைகளை கொண்டவர்களாகவும் இருப்பர் . இவ்வாறான விடயங்கள் நன்கொடையாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் நோக்கங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் அல்லது உள்ளடக்கப்படாமலும் இருக்கலாம். இது மீள்குடியமர்த்தல் தொடர்பான பல உணர்வுகளை ஏற்படுத்த முடியும். இவ்வாய்வானது இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகம் ஒன்றின் மீள்குடியமர்த்தல் எவ்வகையான பலனைத் தந்துள்ளது மற்றும் பின் அனர்த்த மீள்குடியமர்த்தல் நிகழ்வுகள் எவ்வாறான படிப்பினை வழங்கியுள்ளது என்பதனை புரிந்துகொள்ள முயற்சிக்கின்றது.
(ஆவணப் பதிவிறக்கத்திற்கு)
இலங்கையில் வரதட்சணைகள் மீதான இடப்பெயர்வின் தாக்கம்
எழுத்தாளர்கள்:
தனேஷ் ஜயதிலக மற்றும் கோப்பாலப்பிள்ளை அமிர்தலிங்கம்
முரண்பாடு, இயற்கை அனரத்தம் மற்றும் அபிவிருத்தி போன்றவற்றின் காரணமாக ஏற்படக்கூடிய இடப்பெயர்வுகள் இடப்பெயர்வாளர்களுக்கு நேரடியான மற்றும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவது மாத்திரமின்றி அவர்களுடைய கலாசாரம் மற்றும் முழு சமூகத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். இவ்வாய்வு உள்நாட்டு யுத்தம் மற்றும் 2004 இல் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு இலங்கையின் வரதட்சணை முறைமை மற்றும் அதன் விளைவுகள் காரணமாக பின் தொடர்கின்ற பெண்களின் வாழ்வாதாரம், குடும்ப வாழ்வு மற்றும் சமூக பாரம்பரியங்கள் போன்றவற்றில் ஏற்படுத்திய தாக்கத்தினை பரீட்சிப்பதனை நோக்கமாகக் கொண்டதாகும். இலங்கையில் இடப்பெயர்வு, பால்நிலை மற்றும் வரதட்சணை முறைமைப் பற்றிய ஆய்வுகள் இருந்தாலும் எமது அறிவுக் கெட்டியவரை இடப்பெயர்ச்சியினால் வரதட்சணைகளில் ஏற்படுகின்ற தாக்கம் பற்றிய ஆய்வு இல்லையென்றே கூறலாம். இவ்வாய்வு இதனை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் முயற்சியாகவே அமைகின்றது.
(ஆவணப் பதிவிறக்கத்திற்கு)
|