நகர்ப்புற அபாயம் பற்றிய 24 மணிநேர சுழற்சியை விளித்துரைத்தல்: நகரங்களில் காணப்படும் மோதல்சாரா வன்முறைகள் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய பால்நிலைமயப்படுத்தப்பட்ட கண்ணோட்டங்கள்Karachi Urban Lab (KUL), Institute of Business Administration Karachi (IBA) மற்றும் Kounkuey Design Initiative (KDI) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து University of Nottingham இன் பங்காண்மையுடன் பரீட்சார்த்த செயற்றிட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களில் மோதல்சாரா வன்முறைகளும் காலநிலை மாற்ற அபாயங்களும் எவ்வாறு ஒன்றையொன்று மேவி நின்று பாதிப்படையக்கூடிய தன்மையை அதிகரிக்கின்றன என்பது பற்றியும், அத்தகைய அபாயங்கள் பற்றிய அனுபவங்களும் உணர்வுகளும் நகர்ப்புற சூழல் முழுவதும் பால்நிலையுடன் எவ்வாறு வேறுபடுகின்றன என்பது பற்றியும் இந்த ஆய்வு ஆய்ந்தறிந்தது.
2021 ஆம் ஆண்டில் 7 மாத பரீட்சார்த்த செயற்றிட்டக் காலப்பகுதியின்போது, கொழும்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் இரண்டு சமூகங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. சமூகம் பற்றிய சுயவிபரக் குறிப்புக்களினதும் (community profiles) வரைபடங்களினதும் உருவாக்கத்துடன் சேர்த்து, ஆழமான நேர்காணல்களையும் கவனக்குவிவுக் கலந்துரையாடல்களையும் பயன்படுத்தி லுனுபொக்குன மற்றும் சமந்திரனபுர ஆகிய இடங்களில் வதியும் பெண்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டன. ஆய்வாளர்கள், தமது ஆய்வின் முடிவுகளை நொட்டிங்காம் பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையவழிக் கருத்தரங்குகளில் (webinars) முன்வைத்ததுடன், பின்வரும் ஆவணமயமாக்கங்களுக்கும் பங்களிப்புச் செய்தனர்: Building resilience in fragile urban environments - Colombo, வலைப்பதிவுகள் - Realising resilience: How do we make COP26 deliver for adaptation in fragile urban environments?, கொள்கைச் சுருக்கங்கள் - How do we make COP26 deliver for adaptation in fragile urban environments?. இவை, மோதல்சாரா வன்முறை அபாயங்களும் காலநிலை மாற்ற அபாயங்களும் எவ்வாறு நகரங்களில் ஒன்றுடனொன்று இணைகின்றன என்பது பற்றியும், இயைபாக்கமடைதல் மற்றும் உறுப்புரைகள் என்பவற்றினால் கருதப்படுவது யாது என்பது பற்றியும் நுண்ணாய்வு செய்கின்றன. இச்செயற்றிட்டமானது, கிளஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 2021 ஆம் ஆண்டுக்கான காலநிலை மாற்றம் பற்றிய மாநாட்டுக்கு (COP26) அதன் ஆய்வு முடிவுகளையும் பரிந்துரைகளையும் வழங்கி பங்களிப்புச் செய்துமிருந்தது. பரீட்சார்த்த செயற்றிட்டமானது நகர்ப்புற காலநிலை இயைபாக்கம் மற்றும் நகர்ப்புற வன்முறைகள் ஆகிய துறைகளிலிருந்து முறைமையியல்களையும் கருத்தேற்புக்களையும் உருவாக்கி, விளித்துரைக்கப்பட்ட சிக்கலான தரவுகளை ஆய்ந்தறிந்து பன்முக இடை-இணைப்புக்களையும் புரிந்துகொண்டு, எதிர்கால ஆய்வுக்கான ஓர் அடிப்படையையும் நிறுவியது. பாதிப்புறத்தகுநிலையின் தன்மை, விநியோகம் மற்றும் இயங்குநிலைகள் பற்றியும், அத்துடன் பால்நிலை, வன்முறைகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடைய முறைமைப்படுத்தப்பட்ட அபாயங்கள் பற்றியும் சிந்தித்து, அது கொள்கையிலும் நடைமுறையிலும் மாற்றத்திற்கான சாத்தியங்கள் குறித்து தெரியப்படுத்தியது. இந்த ஆய்வுக்கு Global Challenges Research Fund (GCRF) நிதியளிப்புச் செய்தது |