தெரியா நகரம் : புலப்படக்கூடிய (புலப்படாத) நகர இடப்பெயர்வுபின்னணிபூர்த்தி செய்யப்பட்ட ஒரு பகுதியாக ,நகர கற்கையின் ஒரு அங்கமாக , கொழும்பிலுள்ள நான்கு குறைவருமானம் பெறும் சமூகங்களின் வாழ்க்கை முறை அனுபவம் மற்றும் அவர்களின் அபிலாசைகள் போன்றவற்றை புரிந்துக்கொள்வதற்கான தரவு சேகரிக்கப்பட்டன. இதற்கு ஆய்வாளர்கள் பல நுட்பங்களை உதாரணமாக வாய்மொழி வரலாறு, நடத்தல், இடப்பெயர்வு வீடியோ, சமூக குறிப்புகள் சமூக வரலாற்று வளங்கள் தொடர்பான உட்கட்டமைப்பு வரைப்படங்கள் மற்றும் நிழற்படங்கள் போன்றன தனிநபர், சமூக மட்டம் மற்றும் நகர மட்டங்களில் உபயோகித்தனர். இவ்வணுகுமுறை Ushahidii, Ramblr, போன்ற மென்பொருள்களுடன் ஓவியம் மற்றும் காமிக்ஸ் நிபுணத்துவம் உடைவர்களுடன் சேர்ந்து ஆய்வு தொடர்பான வரைதல் வேலைகளும் விருத்தி செய்யப்பட்டன. களத்தில் சகபணியாளர்களுடன் ஆய்வாளர்கள் நிழற்படம்மக்கள் மற்றும் சமூகத்தின் நாளாந்த வாழ்வின் பயன்மிக்க உள்ளார்ந்தத்தை நிழற்படங்கள் தருகின்றன. Ramblr நடைப்பயணம்Ramblr ஊடாக மக்களின் நாளாந்த மற்றும் வாராந்த நடைமுறைகளை அமைவிடசார் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குரல் பதிவுகள் என்பனவற்றுடன் பதியப்படக்கூடியதாக இருக்கும். இது அவர்களுடைய உலகத்தின் தனித்துவமான பார்வையினை அளித்ததுடன் அவர்களுக்கு எது முக்கியம் என்பதனையும் காட்டியது. வழக்க நடைமுறையின் Ramblr வரைபடங்கள் இடப்பெயர்வு வீடியோக்கள்புலம்பெயர்ந்தோரின் இடப்பெயர்வின் வாழ்க்கை கதையினை உருவாக்க வீடியோக்கல் பயன்படுத்தப்பட்டன. அதன் மூலம் மக்கள் தங்கள் இடஞ்சார்ந்த வரலாற்றைப் பிரதிபலிக்கவும், அவர்களின் இடப்பெயர்வுகளை வரையும்போது அவர்களின் கதையை விவரிக்கவும் அனுமதிக்கப்பட்டனர். இடப்பெயர்வு வீடியோ வரைபடங்கள் இடப்பெயர்வு வரைபடங்கள்வாய்வழி வரலாறுகள் மற்றும் காலவரிசைகள் இடப்பெயர்வு வரைபடங்களை உருவாக்குவதற்கு பயனுள்ளதாக இருந்தன. அவை புலம்பெயர்ந்தோர் வீடு என அழைக்கப்பட்டதின் சரியான எண்ணிக்கையினை காட்டின. மேலும் தற்போதைய இடத்தில் குடியேறுவதற்கு முன்பு பல்வேறு நிலைகளை உணர்த்தின. இடப்பெயர்வு வரைபடங்கள் வளங்கள் தொடர்பான வரைபடங்கள்ஒவ்வொரு ஆய்வு பிரதேசத்திலும் உள்ள வளங்களை அடையாளப்படுத்த வரைப்படம் ஒரு நுட்பமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தனிநபர் மற்றும் சமூக நடத்தையினை புரிந்துகொள்வதற்கும், சூழலுடனான அவர்களின் தொடர்பினை அறிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும். இரு ஆய்வுப் பகுதிகளின் வரைப்படங்கள் ஒப்பீட்டு வரைப்படங்கள்இவைகள் இப்பிரதேசம் எவ்வாறு காலத்துடன் அபிவிருத்தி அடைந்துள்ளது என்பதனை புரிந்துகொள்ள உதவுகின்றது. உதாரணமாக கீழே தரப்பட்டுள்ள வரைப்படம் குடியிருப்புகளின் பரம்பல், நில அமைப்பினை மாற்றியமைத்தல் மற்றும் இயற்கை கட்டமைப்பினை அழித்தல் என்பனவற்றுடன் இவை எவ்வாறு தொடர்ச்சியான வெள்ளம் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது என்பதனை காட்டுகின்றது. இரு ஆய்வுப் பகுதிகளின் ஒப்பீட்டு வரைப்படங்கள் வரலாற்று வரைபடங்கள், சுவடிகள் மற்றும் நகர திட்டங்கள்இவை காலத்திற்கேற்ப எவ்வாறு நகரம் பரிணாமம் அடைந்துள்ளது என்பதனை புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். இவற்றை தனிநபர், முறைசாரா குயடிமைப்புகள் மற்றும் இடப்பெயர் வரலாறுகள் என்பனவற்றுடன் தொடர்புபடுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இடப்பெயர்வுகள் மற்றும் முறைசாரா குடியமைப்புகள் எவ்வாறு நகர வாழ்க்கையில் தாக்கம் செலுத்தியுள்ளன மற்றும் தொடர்ந்து செலுத்துகின்றன என்பதனையும் அதற்கான நகர திட்டமிடலாளர்களின் முயற்சிகளையும் அறிந்து கொள்ளலாம். கொழும்பு நகரின் வரைப்படங்களும் அதன் பரிணாமமும் ஆதாரங்கள்: ப்ரோஹியர், ஆர். எல் மற்றும் பவுலஸ், ஜே. எச். ஓ. (1951) நிலம், வரைபடங்கள் மற்றும் ஆய்வுகள்: சர்வேயர் ஜெனரலின் அலுவலகத்தில் உள்ள வரலாற்று வரைபடங்களின் விளக்க அட்டவணை, கொழும்பு, தொகுதி. II இலங்கை அரசு பத்திரிகை, கொழும்பு (வரைபடங்கள் 1 மற்றும் 2); ஹுலுகல்லே, எச்.ஏ.ஜே. (1965) கொழும்பு நகராட்சி மன்றத்தின் நூற்றாண்டு தொகுதி 1865 - 1965, கொழும்பு நகராட்சி மன்றம் (வரைபடம் 3). கொழும்பு மற்றும் புறக்கோட்டை பகுதிகளின் காட்சிகள் - 1880 ஆதாரம்: பத்தொன்பதாம் நூற்றாண்டு தொகுப்புகள் இணையத்தளம், புகைப்படம் 1 மற்றும் புகைப்படம் 2, அணுகப்பட்டது 8 நவம்பர் 2017. ஓவியம் மற்றும் காமிக்ஸ் வேலைஅறிஞர்களின் கற்பனையினூடாக நகர வாழ்க்கையினை ஒரு கருத்தியல் ஓவியமாக வரையப்பட்டது. ‘குறை வருமானம் பெறும் இடங்களில் வாழும் மக்களை பொறுத்தவரை சிறந்த நகர வாழ்க்கையினை பெறுவதற்கு கிராம புறங்களிலிருந்து இடப்பெயர்கின்றனர். ஆனால் சிலர் சமூக மற்றும் பொருளாதார சிக்கலுக்கு மாட்டிக்கொள்கின்றனர்.செல்வம் மற்றும் கல்விக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகலுடன், சமுதாயத்தின் உயர் மட்டங்களுக்குச் செல்வதற்கான நம்பிக்கை அவர்களுக்கு மிகக் குறைவு’. ‘Migrants on the Margins’ எனும் கதைப்புத்தகத்தில் தோட்டதுறையிலிருந்து கொழும்பிலுள்ள வதுல்ல எனும் இடத்திற்கு இடப்பெயர்ந்த அருணாசலம் என்பவரின் உண்மை வரலாற்றினை காமிக்ஸ் முறையில் சொல்கின்றது. நகரின் குடியேறியவர்கள்ன் தனித்துவமான வாழ்க்கை பயண அனுபவத்தை வலியுறுத்துகையில் அவர்களின் தெரிவு நிலையை அதிகரிப்பதே கதையின் நோக்கம். மேலும் தகவலுக்கு பார்க்கவும். ஓவியம் மற்றும் கதை புத்தகம் தகவல் பரிமாற்றம்கண்டுபிடிப்புகளை பரப்புவதற்கும் ஆராய்ச்சியைப் பகிர்ந்து கொள்வதற்கும் கொழும்பு மற்றும் வெளிநாடுகளில் பல பட்டறைகள் நடத்தப்பட்டன. பார்க்கவும் ‘சிக்கிய மக்கள்’ கூட்டு பரப்புதல் மற்றும் அடுத்த படிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு |