CMRD குழுவைப் பற்றிCMRD அதன் செயற்பாடு மற்றும் நிலைபேண் தன்மைக்கு ஆதரிக்கும் வகையில் இரு குழுவினர்களை ஒன்றிணைைக்கிறது. CMRD யின் முதன்மைக் குழுவானது பொருளாதாரம், சமூகவியல், மக்கள்தொகை, புவியியல், இடப்பெயர்வு, குடித்தொகைக் கல்வி, ஆளுகை, பாலினம், சுற்றுச் சூழல், நகர வளர்ச்சி , மோதல், வாழ்வாதாரங்கள், இடப்பெயர்வு, இடமாற்றம், மீள்குடியேற்றம், உதவி மேம்பாட்டுக் கொள்கை, நிதி மற்றும் புள்ளிவிவரங்கள் ஆகிய துறைகளில் கல்வி மற்றும் பயிற்சி பின்னணியினைக் கொண்ட ஆய்வாளர்கள் குழாமினரை உள்ளடக்கியது.
இரண்டாவதாக மையத்தின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பொது நிர்வாகத்திற்கு பொறுப்பான நிர்வாக குழு. அவர்கள் நடுத்தர மற்றும் நீண்ட கால மூலோபாய திட்டமிடல் மற்றும் CMRD யின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக ஏனைய விடயங்கள் தொடர்பான ஆலோசனை வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளனர். ஆராய்ச்சி ஒத்துழைப்பாளர்களின் சிறப்பு பகுதிகளில் ஆதரவை வழங்கியுள்ளது. CMRD க்கான வலைத்தளத்தினை டபிள்யூ. ஏ. கே சஞ்சீவா உருவாக்கியதுடன் அப்துல்லாஹ் அஸாம் ஆகியோரால் நிர்வகிக்கப்படுகிறது. சட்டரீதியான மற்றும் பிற தேவைகளை உறுதி செய்வதற்காக கம்பனியின் வருடாந்த கணக்காய்வுகள் பட்டய கணக்காளர்களான Amarasekera & Company நடத்துவதுடன் மையத்திற்கான செயலக சேவைகளை Corporate Affairs (Pvt) Ltd வழங்குகின்றன. .
|