புலம்பெயர்வு ஆளுகை சாதனங்கள் என்றவகையில் இருதரப்பு தொழில் உடன்படிக்கைகள்: கட்டமைப்புக்கள் மற்றும் விளைவுகள் பற்றிய ஒரு பால்நிலைசார் பகுப்பாய்வுஇந்த ஆய்வு லண்டனிலுள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தின் பங்காண்மையுடன் நடாத்தப்படுகின்றது. இச்செயற்றிட்டத்தின் மைய நோக்கம் யாதெனில், ஆசியாவில் புலம்பெயர்வுசார் செல்நெறி முழுவதிலும் தொழில் நிமித்தமான புலம்பெயர்வு ஆளுகையின் முக்கிய வகையொன்றாக, இருதரப்பு தொழில் உடன்படிக்கைகள் (BLAs) பற்றிய நுண்ணாய்வொன்றை நடாத்துவதாகும். புலம்பெயர்வின் பெண்ணியமயமாக்கலைக் கருத்திற்கொண்டு, இந்த உடன்படிக்கைகள் எந்தளவுக்கு பால்நிலை சமத்துவமின்மையைக் குறைக்கின்றன அல்லது கூட்டுகின்றன என்பதைத் தீர்மானிக்கும் பொருட்டே மேற்படி நுண்ணாய்வு நடாத்தப்படுகின்றது. தொழில் நிமித்தமான புலம்பெயர்வுக்கான ஆளுகைப் பொறிமுறைகளாக இருதரப்பு தொழில் உடன்படிக்கைகளை (BLAs) ஆராய்வதற்கான பரந்த நோக்கத்துடன், அதிலும் குறிப்பாக கட்டமைப்புசார் மட்டத்திலும் தனிநபர் மட்டத்திலும் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பிலான துறைகள் முழுவதிலும் அவர்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதை மதிப்பிடுவதற்கான நோக்கத்துடன், பல்வேறு இலக்கு நாடுகளுடன் இலங்கை பேணிவருகின்ற இருதரப்பு தொழில் உடன்படிக்கைகளைத் (BLAs) தேடியறிவதே இச்செயற்றிட்டத்தின் குறிக்கோளாக உள்ளது. இந்த ஆய்வுச் செயற்றிட்டத்திற்கு British Academy (BA) நிதியளிப்புச் செய்கின்றது. |