இயற்கை பேரழிவுகளுடன் கூடிய திட்டமிடப்பட்ட மீள்குடியமர்த்தல்: இலங்கை தொடர்பானது

எழுத்தாளர்கள்: ரன்மினி விதானகம, அலிகான் மொஹிடீன், தனேஷ் ஜயதிலக மற்றும் ரஜித் லக்ஷ்மன்

Planned Relocations following natural disastersஅனர்த்தம் காரணமாக ஏற்படுகின்ற இடம்பெயர்வுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இந்நிலையினால் ஈர்க்கப்பட்ட பங்குதாரர்களுக்கும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. குறுகிய கால பாதிப்புகள் அதிக கவனத்தை பெறும் அதேவேளை நீண்ட கால தாக்கங்கள் அவ்வாறான கவனத்தைப் பெறுவதில்லை. மீள்குடியமர்த்தல் திட்டங்களில் பாதுகாப்பு பிரதான நோக்காக காணப்படும் அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள பல்வகை தேவைகளை கொண்டவர்களாகவும் இருப்பர் . இவ்வாறான விடயங்கள் நன்கொடையாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் நோக்கங்களில் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் அல்லது உள்ளடக்கப்படாமலும் இருக்கலாம். இது மீள்குடியமர்த்தல் தொடர்பான பல உணர்வுகளை ஏற்படுத்த முடியும். இவ்வாய்வானது இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகம் ஒன்றின் மீள்குடியமர்த்தல் எவ்வகையான பலனைத் தந்துள்ளது மற்றும் பின் அனர்த்த மீள்குடியமர்த்தல் நிகழ்வுகள் எவ்வாறான படிப்பினை வழங்கியுள்ளது என்பதனை புரிந்துகொள்ள முயற்சிக்கின்றது.

(ஆவணப் பதிவிறக்கத்திற்கு)


இலங்கையில் வரதட்சணைகள் மீதான இடப்பெயர்வின் தாக்கம்

எழுத்தாளர்கள்: தனேஷ் ஜயதிலக மற்றும் கோப்பாலப்பிள்ளை அமிர்தலிங்கம்

Impact of Displacement On Dowriesமுரண்பாடு, இயற்கை அனரத்தம் மற்றும் அபிவிருத்தி போன்றவற்றின் காரணமாக ஏற்படக்கூடிய இடப்பெயர்வுகள் இடப்பெயர்வாளர்களுக்கு நேரடியான மற்றும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவது மாத்திரமின்றி அவர்களுடைய கலாசாரம் மற்றும் முழு சமூகத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். இவ்வாய்வு உள்நாட்டு யுத்தம் மற்றும் 2004 இல் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு இலங்கையின் வரதட்சணை முறைமை மற்றும் அதன் விளைவுகள் காரணமாக பின் தொடர்கின்ற பெண்களின் வாழ்வாதாரம், குடும்ப வாழ்வு மற்றும் சமூக பாரம்பரியங்கள் போன்றவற்றில் ஏற்படுத்திய தாக்கத்தினை பரீட்சிப்பதனை நோக்கமாகக் கொண்டதாகும். இலங்கையில் இடப்பெயர்வு, பால்நிலை மற்றும் வரதட்சணை முறைமைப் பற்றிய ஆய்வுகள் இருந்தாலும் எமது அறிவுக் கெட்டியவரை இடப்பெயர்ச்சியினால் வரதட்சணைகளில் ஏற்படுகின்ற தாக்கம் பற்றிய ஆய்வு இல்லையென்றே கூறலாம். இவ்வாய்வு இதனை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் முயற்சியாகவே அமைகின்றது.

(ஆவணப் பதிவிறக்கத்திற்கு)