ஓவியம் மற்றும் காமிக்ஸ் வேலை

அறிஞர்களின் கற்பனையினூடாக நகர வாழ்க்கையினை ஒரு கருத்தியல் ஓவியமாக வரையப்பட்டது. குறை வருமானம் பெறும் இடங்களில் வாழும் மக்களை பொறுத்தவரை சிறந்த நகர வாழ்க்கையினை பெறுவதற்கு கிராம புறங்களிலிருந்து இடப்பெயர்கின்றனர். ஆனால் சிலர் சமூக மற்றும் பொருளாதார சிக்கலுக்கு மாட்டிக்கொள்கின்றனர்.செல்வம் மற்றும் கல்விக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகலுடன், சமுதாயத்தின் உயர் மட்டங்களுக்குச் செல்வதற்கான நம்பிக்கை அவர்களுக்கு மிகக் குறைவு. Migrants on the Margins எனும் கதைப்புத்தகத்தில் தோட்டதுறையிலிருந்து கொழும்பிலுள்ள வதுல்ல எனும் இடத்திற்கு இடப்பெயர்ந்த அருணாசலம் என்பவரின் உண்மை வரலாற்றினை காமிக்ஸ் முறையில் சொல்கின்றது. நகரின் குடியேறியவர்கள்ன் தனித்துவமான வாழ்க்கை பயண அனுபவத்தை வலியுறுத்துகையில் அவர்களின் தெரிவு நிலையை அதிகரிப்பதே கதையின் நோக்கம்.

ஓவியம் மற்றும் காமிக்ஸ் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.