சேர்ப்பதற்கான பாதைகளை நோக்கி: மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு உட்கட்டமைப்பு பணிகளை உருவாக்கல்

Off-grid Cityஆராய்ச்சி திட்டமானது சசெக்ஸ் பல்கலைக்கழகம் அபிவிருத்திக்கான கற்கை நிறுவனம் மற்றும் டர்ஹாம் பல்கலைக்ககழம் ஆகிய பங்காளர்களுடன் இணைந்து ஏழை நகர்ப்புறவாசிகளுக்கான சேவை வழங்கலின் பிரதான முறைகளில் உட்படுத்துதல் மற்றும் விலக்குதல் என்பனவற்றி தாக்கங்களை ஆராய்கிறது. இக்கலப்பு முறை ஆய்வின் நோக்கங்களில் நீர், சுகாதாரம், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு போன்ற அடிப்படை சேவைகளை பல்வேறு வடிவங்களில் பெற்றுக் கொள்ளும் முறைகளை அடையாளம் காண்பதுடன் அவற்றை பெற்றுக்கொள்வதற்கான தடைகளை கண்டறிந்து சேவைகளை அணுகுவதற்கான சாதகமான தலையீடுகளை உருவாக்குதல் என்பன உள்ளடங்குகின்றன. நகர்ப்புற, குறைநகர்புற மற்றும் தோட்ட சமூகங்களில் உள்ள ஐந்து உட்கட்டமைப்புகளை செவநத நகர வள நிறுவனத்துடன் இணைந்து அவ் உட்கட்டமைப்புள் இல்லாமைக்கான காரணத்தை அடையாளப்படுத்துவதுடன அவற்றினை உள்ளீர்ப்பதற்கான நடைமுறை தீர்வினையும் இவ் ஆய்வு முன்மொழியும்.

ஆய்வு பிரதேசம்