உதவி பொறுப்புக்கூறல்: நீடித்த நெருக்கடியில் மனிதாபிமான பன்மைத்துவம்

PRIO) Peace Research Institute வுடன் இணைந்து உதவி பொறுப்புக் கூறல் ஆய்வு நடத்தப்படவுள்ளது. சாதாரண மற்றும் தொழில்முறை மனிதாபிமான உதவி வழங்குநர்களால் புரிந்து கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் பொறுப்புக்கூறலின் தார்மீக மற்றும் சமூக பரிமாணங்களை இவ் ஆய்வு வரைபடம் ஆவணம் மற்றும் பகுப்பாய்வு செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது. இவ் ஆய்வில் விடய ஆய்வ, பண்புசார் முறைகளான பங்கேற்பு வரைபடம், ஆவண பகுப்பாய்வு, பகுதி கட்டமைக்கப்பட்ட நேர்காணல்கள் மற்றும் மைய குழு கலந்துரையாடல்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மற்றும் மீள்திரும்பிய சமூகங்களிடையே பொறுப்புக் கூறல் கருத்தாக்கங்களின் சமூகங்களிடையே நிறுவன மற்றும் அனுபவ பரிமாணங்களை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும். அறிவை விருத்தி செய்வதன் மூலம் தொழில்முறை மனிதாபிமானவர்களின் முயற்சிகளை ஆதரிக்கவும் அதன் மூலம் உள்ளுர்மயமாக்கலினை மேம்படுத்துவதனூடாக உதவி வழங்கலின் செயல்திறனை ஆதிகரிக்கவும் முடியும் என திட்டம் நம்புறகிறது.

சமூகங்களுக்கு வீட்டு உதவி