முகப்பு
எங்களைப் பற்றி
வெளியீடுகள்
திட்டங்கள்
CMRD குழு
இணைப்புகள்
தொடர்புக்கு
සිංහල
English
நாங்கள் யார்
எங்கள் குறிக்கோள்
ஆலோசனை சபை
பதிவு செய்தல்
சமீபத்திய வேலை
CMRD வெளியீடுகள்
CMRD உறுப்பினர்கள் மூலமான வெளியீடுகள்
அறிக்கைகள்
ஆராய்ச்சி ஆவணங்கள்
சமூக சுயவிவரங்கள்
வலைப்பதிவு
வீடியோக்கள்
காமிக்ஸ்
மற்ற
ஆய்விதழ் கட்டுரைகள்
புத்தகங்கள்
புத்தக பிரிவுகள்
கல்விசார் மாநாடுகள்
ஏனைய வெளியீடுகள்
நடப்புத் திட்டப் பணிகள்
நிறைவுப்பெற்ற திட்டப்பணிகள்
ஆய்வுப் பங்காளர்கள்
வைகறை
துண்டிக்கப்பட்ட நகரம்
உதவி பொறுப்புக்கூறல்
இடம்பெயர்வு ஆளுகை
24 மணி நேர நகர்ப்புற ஆபத்து
தெரியா நகரம்
சிக்கிய மக்கள்
ஏனைய
குழுவினைப் பற்றி
முகாமைத்துவம்
ஆய்வுக் குழு
கூட்டுப்பணியாளர்கள்
அனைவருக்கும் ஒரு துளி
போதிய முகாமைத்துவின்மை அருவி எஸ்டேட்டின் நீர் தட்டுப்பாட்டுக்கு எவ்வாறு காரணமாகின்றது: நீரின் கதை
ஒரு காலைப் பொழுதில் கிருஷ்ணா விழித்து குழாயினை திறக்கின்றார். ஆனால் அதிலிருந்து நீர் வரவில்லை. அவர் விரக்தியடைந்தார்? ஏன் இவ்வாறு நடந்தது என்று?
தண்ணீர் குழாய் வழியாக செல்வதை கிருஷ்ணா அறிந்திருந்தார், இயற்கை நீரூற்றிலிருந்து தொடங்கியது. தொட்டிகளில் சேமிக்கப்பட்டது.
தோட்ட நிர்வாக ஊழியரால் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் கிருஷ்ணா அறியாதது என்னவென்றால் அவரது அயலவர் ஒருவர் தன் வீட்டிற்கு தண்ணீர் விநியோகத்தை அதிகம் பெறுவதற்காக தண்ணீர் விநியோகஸ்தர்க்கு லஞ்சம் கொடுத்தார்.
நாட்களில் கிருஷ்ணாவின் நீர் விநியோகம் குறைகிறது.
அதனால் தானே இவ்விடயத்தினை தீர்க்க முடிவெடுத்தார். அவர் தனது வீட்டிலிருந்து பிரதான நீரூற்றுக்கு ஒரு குழாயினை இணைத்தார். செங்குத்தான மலையில் 1 கிலோமீற்றர் நீண்டு செல்கிறது.
இறுதியாக கிருஷ்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் மீண்டும் தண்ணீரினை பெறுகின்றனர்!
ஒரு நாள் அவைகள் துண்டிக்கப்பட்டன....
காரணத்தை கண்டறிய சேறும் சகதியுமான மலையில் கிருஷ்ணா ஏறினார்
சில சமயங்களில் கடுமையான மழை மற்றும் விலங்குகளின் நடமாற்றத்தினால் அவரின் நீர் விநியோகம் துண்டிக்கப்படுகின்றது.
சில சமயங்களில் அயல் வீட்டார்கள் அவருடைய குழாயினை துண்டித்து தண்ணீரினை திருடுவர். கிருஷ்ணாவிற்கு மூன்றாவது திட்டம் தேவைப்பட்டது.
எனவே, கிணறு வைத்திருந்த மற்றொரு பக்கத்து வீட்டுக்காரிடம் தண்ணீர் வாங்கினார். அது 500 லீற்றருக்கு 250 ரூபாய் செலவாகிறது. கிருஷ்ணா தனக்கென சொந்தமாக ஒரு கிணறு தேவைப்பட்டது. ஆனால் அது மிகவும் விலையுயர்ந்தது.
வெகு அருகாமையில் அவரது அண்டை வீட்டாரான கண்ணம்மா வசித்து வந்தார். கண்ணம்மாவிற்கு ந்தமான ஒரு கிணறு உள்ளது. எனினும் அது அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை.
35 வருடங்களாக கண்ணம்மா தண்ணீரினை பெறுவதற்காக போராடி இருந்தார். இவரும் மலையிலிருந்து தண்ணீரினை பெறுவதற்கு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தார். மேலும் தண்ணீர் ஜாடிகளை ள்வனவு செய்வது விலை உயர்ந்தது.
அதனால் அவர் தனது 3 குழந்தைகளையும் கழுவுவதற்காக ஆற்றுக்கு தூக்கிச் செல்வார்.
ஆனால் அவரது இளைய மகள் ஊனமுற்றவர் மேலும் அவள் வளர வளர அது கடினமாகிவிட்டது. இதனால் தனது மகளை 12 நாட்களுக்கு குளிப்பாட்டாமல் விட்டுவிடுவார்.
கண்ணம்மாவிற்கு இதுதான் இறுதி. தனது மூத்த மகனின் உதவியுடனும் ஓய்வுக்காலப் பணத்துடனும் தனது வீட்டு பின்புறத்தில் ஒரு குழாய்க் கிணறு அமைத்தார். அதற்கு மிகவும் செலவாகியது.
ஆனால் அவர் தற்போது அக்கம்பக்கத்தினருக்கு தண்ணீர் விற்று பணம் சம்பாதித்து வருகிறார். கிருஷ்ணா கண்ணம்மா வசிக்கும் தோட்டம் தண்ணீர் அதிகம் உள்ளது. அது எல்லோரையும் சமமாக சென்றடைவதை உறுதி செய்வது எப்படி?
அண்டைய சமூகத்திடம் ஒரு தீர்வு உள்ளது. அவர்களும் இயற்கை நீரூற்றிலிருந்து நீரை இறைக்கிறார்கள். மற்றும் அது தொட்டியில் சேமிக்கப்படுகிறது. இத்தண்ணீர் குறிப்பிட்ட நேரங்களில் சுமார் 40 வீடுகளுக்கு வழங்கப்படுகிறது.
ஒரு நிர்வாக குழு மாதாந்த தண்ணீர் கட்டணத்தை வசூல் செய்கிறது மீட்டர் பயன்பாட்டினூடாக ஊழலை நிறுத்த முடியும்.
24 மணித்தியாலம் குடிநீர் விநியோகம் இல்லாவிடினும், தண்ணீர் விரையம் குறைக்கப்பட்டு அனைவரும் சமமான முறையில் நீரை பெறு¢ன்றனர். கிருஷ்ணா மற்றும் கண்ணம்மாவின் சமூகங்களிலும் ஒரு முறையான நீர் விநியோக திட்டம் உருவாக்கப்பட முடியும். அரசும் தோட்ட நிர்வாகமும் பொறுப்பேற்றால் அதைத் தக்கவைக்க குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். இச்சமூகத்தின் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்கும்.
© 2012 - 2024, CMRD