CMRD இணையத்தளத்திற்கு வரவேற்கிறோம்

இலங்கையின் வறுமை மற்றும் பொரு­ளா­தார அபிவிருத்தி சூழலில், உள்நாட்டு மற்றும் சர்வதேச புலம்பெயர்­வாளர்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதா­ரங்களைப் பாதிக்கும் கொள்கைகளை மேம்படுத்தல் தொடர்பான ஆய்வு ஆதாரங்­களை வழங்க நாம் கடமைப்பட்­டுள்ளோம்.

ஆய்வுகளைத் தவிர திறன் மேம்பாட்டு மற்றும் ஏனைய கொள்கைசார் நடவடிக்கைகளினூடாக கொள்கை விடயங்களிலும் தாக்கத்தினை ஏற்படுத்த விரும்புகின்றோம்.

இலங்கை ஏன் முக்கியமானது?

பண்டையகால, காலனித்துவ மற்றும் சமீபத்திய வரலாறுகளில் இலங்கை­யின் அபிவிருத்தியானது புலம்பெயர்வுகளுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளது. முப்பது வருட உள்நாட்டு யுத்தம், 2004 யில் ஏற்பட்ட சுனாமி மற்றும் பாரிய அபிவிருத்திகள் போன்றவற்றின் காரணமாக இலங்கை பலவந்த புலம்பெயர்வின் மையமாகக் காணப்படுகிறது. அண்மைய தசாப்தங்களில் உ ள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்புகாக பாரியளவிலான புலம்பெயர்வு நகர்வுகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

CMRD இவ்வகையான தன்னிச்சையான மற்றும் தன்னிச்சையற்ற பிரச்சினைகள் மற்றும் அவைகளுடைய தேடல்கள் என்பனவற்றை அறிவு ரீதியாக இலங்கை மற்றும் உலகத்திற்கு முன்வைப்பதற்கான மையமாக CMRD காணப்படுகிறது.